ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கையை வெளியிட வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்
ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வின் அறிக்கையை வெளியிட்டால் தமிழர் நாகரிகம் தான், உலகின் பழமையான நாகரிகம் என்பதை உறுதி செய்ய முடியும் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பழங்காலத்தில் மனித மூளையில் ஏற்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது அங்கு கிடைத்த மண்டை ஓட்டின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதை உணர்த்த ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
Comments