மொபைலை Charge செய்வதால் கூட நிகழும் Cyber Attack.. தவிர்ப்பது எப்படி..?

0 1389

நகை, பணம் திருட்டை போல தகவல்கள் திருட்டு மற்றும் சைபர் அட்டாக் மிக பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பல வகையிலும் நமது போன்கள் மற்றும் கணினிகளில் உள்ள தகவல்கள் நமக்கே தெரியாமல் திருட்டு போகின்றன. அந்த வகையில் சார்ஜ் போடுவதன் மூலம், மொபைல்கள் எவ்வாறு ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதை பற்றி காண்போம்.

மொபைலுக்கு சார்ஜ் போட்டால் கூடவா ஹேக் செய்வார்கள் என்று யோசித்தால், அதற்கான பதில் ஆம். இது உலகில் பல நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் வீட்டில் இருக்கும் போது சார்ஜ் செய்வது, போன்களுடன் கொடுக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களால் இந்த விபரீதங்கள் நிகழ்வதில்லை.

image

எங்கே நிகழ்கிறது:

ஆனால் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சார்ஜ் போர்ட்களை பயன்படுத்தும் போதே நமது ஸ்மார்ட் போன்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகின்றன. சமீபத்தில் SBI வெளியிட்ட எச்சரிக்கை ஒன்றில், இவ்வகை தகவல் திருட்டு இந்தியாவிலும் அதிக அளவில் பரவ துவங்கி விட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்:

அதிகாரபூர்வமற்ற செயலிகள், அல்லது தேவை இல்லாத இணையதளங்களை பயன்படுத்தினால் சைபர் அட்டாக் அபாயம் இருந்தது. ஆனால் சார்ஜ் போடுவதால் கூட நிகழ்த்தப்படும் சைபர் அட்டாக்கிற்கு ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) என்று பெயர்.

image

தகவல் திருட்டு:

உலகத்திலேயே தற்போது விலைமதிக்க முடியாத விஷயமாக பார்க்கப்படுவது நம்முடையை தகவல்கள் தான். நாம் எதை பற்றி தேடுகிறோம், எதை வாங்குகிறோம் என்ற தகவல்களை பல முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்கின்றன. இந்த தகவல்கள் ஹேக்கர்கள் கைக்கு சென்றால் பல விபரீதங்கள் நிகழும்.

சகலமும் அவர்கள் வசம்:

ஒரு மொபைல் அல்லது கணினி ஹேக் செய்யப்படுகிறது என்றால் அதில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள், இ மெயில் பாஸ்வோர்ட், வங்கி கணக்கு மற்றும் அதில் உள்ள பணம் குறித்த விவரங்கள் என சகலமும் சைபர் கிரிமினல்கள் வசம் சென்று விடும்

நாம் பயணம் செய்யும்போதோ அல்லது பொது இடங்களில் இருக்கு போதோ மொபைலில் சார்ஜ் தீர்ந்து விட்டது என்றால் அங்கே தென்படும் Public Charging Point-களை பயன்படுத்துவோம். இங்கு தான் துவங்குகிறது பிரச்சனை. முதலில் எல்லாம் சார்ஜர் அடாப்டரை கொண்டு நேரடியாக சார்ஜ் செய்வோம். ஆனால் இப்போது பல Public Charging Station-களில் நேரடியாக USB Port-களை கொடுத்து விடுகிறார்கள்.

image

அடாப்டர் தேவையில்லை:

USB கேபிள் மட்டும் வைத்திருந்தால் போதும். அடாப்டர் தேவையில்லை. இந்த மாதிரி USB Port-களில் சர்க்யூட்களை சைபர் கிரிமினல்கள் பொருத்தி விடுகிறார்கள். அப்படி இல்லையென்றால் போலியான USB Port-களை அங்கு பொருத்தி விடுகிறார்கள். அதன் மூலம் malware ஒன்றை மக்கள் சார்ஜ் போடும்போது மொபைல்களுக்குள் புகுத்தி விடுகிறார்கள். இந்த வகை சைபர் தாக்குதலுக்கே Juice Jacking என்று பெயர். இதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அத்தனையுமே திருடப்பட்டு விடும்.

image

பாதுகாத்து கொள்ளுங்கள்:

வேறுவழியின்றி பொது வெளிகளில் வைக்கப்பட்டுள்ள Public Charging Point-களை பயன்படுத்தினாலும், USB Port-களில் சார்ஜ் போடாமல், அடாப்டரை கொண்டு மொபைல்களுக்கு சார்ஜ் ஏற்றி கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் Power Bank-ஐ கையுடன் எடுத்து சென்று விடுங்கள்.

துரதிர்ஷ்டவசமாக Power Bank-கிலும் சார்ஜ் இல்லை என்றால், முதலில் USB Port-ஐ பயன்படுத்தி Power Bank-கிற்கு சார்ஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மொபைலை Power Bank-ல் இணைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments