சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ராஜா விடுவிப்பு...

0 2963

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக சட்டதிட்ட விதி: 31-ன்படி, வீரபாண்டி ராஜா தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா விடுவிக்கப்பட்டதால், அப்பொறுப்பிற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.சிவலிங்கம் வகித்து வந்த சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு, தேர்தல் பணிக்குழுச் செயலாளராக இருந்த, டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments