இந்திய வான்வெளியை தவிர்த்து விட்டு மலேசியா சென்ற இம்ரான்
இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய வான்வெளியை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதல், காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து உள்ளிட்டவற்றின் பின்னணியில் இரு நாட்டு உறவுகள் சீர் குலைந்துள்ள நிலையில், இந்திய வான் வழியாக பறக்க வேண்டாம் என்ற இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தனது வான் வெளி வழியாக பயணிக்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல தடவை தடை விதித்திருக்கிறது. கடந்த அக்டோபரில் பிரதமர் மோடியின் தனி விமானம் பாகிஸ்தான் மீது பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments