இரு சகோதரிகள் அடித்து கட்டி இழுத்து சென்ற அவலம் - ஊராட்சி மன்றத் தலைவரின் வெறிச்செயல்

0 2093

மேற்குவங்க மாநிலத்தில் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்த பள்ளி ஆசிரியை உள்ளிட்ட சகோதரிகள் இருவர், ஊராட்சிமன்ற தலைவரால் அடித்து துன்புறுத்தி கட்டி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினாஜ்பூர் மாவட்டம் பதாநகர் கிராமத்தில் 12 அடி சாலை அமைக்க இடம் கொடுத்த சகோதரிகள் இருவர், பின்னர் சாலை 24 அடிக்கு விரிவாக்கப்படுமென கூறப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி தலைவர் அமல் சர்க்கார் உள்ளிட்டோர், அந்த இரு சகோதரிகளையும் அடித்து துன்புறுத்தி கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அமல் சர்க்கார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments