ஆசியப் பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளிலும் உயர்வு
ஆசியப் பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளிலும் இன்று உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலை அடுத்து சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில், சரிவுடனேயே வர்த்தகம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.
மருந்துசார் பங்குகளின் லாபத்தை தொடர்ந்து உயர்வுடனேயே வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 238 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 974 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஒருகட்டத்தில் 81 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 739 புள்ளிகளாக வர்த்தகமானது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்தன.
Comments