குப்பை தொட்டி அருகே விட்டு செல்லப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியினால் மீட்பு

0 870

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குப்பை தொட்டி அருகே விட்டு செல்லப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியினால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டியான லட்சுமி கணவர் மற்றும் 3 மகன்கள் இறந்த நிலையில் தனிமையில் விசைத்தறி தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் மூதாட்டியை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் சண்முகம், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மூதாட்டிக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்கி, அவரை தூய்மைப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments