எண்ணெய்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் ஆற்று நீரின் மேற்பரப்பில் எண்ணெய் கசிந்து கொழுந்து விட்டு எரியும் தீ

0 1092

அசாம் மாநிலத்தில் எண்ணெய்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, ஆற்று நீரின் மேற்பரப்பில் எண்ணெய் கசிந்து தீப்பிடித்து எரிந்து வருகிறது. திப்ருகர் மாவட்டத்திலுள்ள சசோனி கிராமப் பகுதியில் ஓடும் புர்கி டைகிங் (Burhi Dihing) ஆற்றின் மேற்பரப்பில், கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீப்பிடித்து எரிந்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆறு வழியாக செல்லும் ஆயில் இந்தியா லிமிட்டட் நிறுவனத்தின் எண்ணெய்க்குழாயில் கசிவு ஏற்பட்டதாகவும், அதற்கு மர்மநபர்கள் தீவைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவலளித்தும், இதுவரை தீயை அணைக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் கிராம மக்கள், தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அச்சமடைந்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments