திருப்பதி கோவிந்தராஜர் கோவிலில் அலங்கார தெப்ப உற்சவம்

0 2276

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நேற்று இரவு தொடங்கிய தெப்ப உற்சவத்தில், கோதண்டராமர் மின்விளக்கு மற்றும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

image

கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 8 ந் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாளில் கோதண்டராம சுவாமி முத்து கவச அலங்காரத்தில் , தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

image

இன்று மாலை பார்த்தசாரதி சுவாமியும், நாளை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, 5-ந் தேதி ஆண்டாள் தாயாருடன் கிருஷ்ணர், 6,7,8 ஆகிய தேதிகளில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் 7 முறை வலம் வரும் வைபவமும் நடக்கிறது.




SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments