வெட்டுக்கிளிகள் படையெடுப்பு...வேதனையில் விவசாயிகள்...!

0 5384

70 ஆண்டுகளில் இல்லாத வகையில், பாகிஸ்தானைத் தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, வேளாண் பயிர்களை கபளீகரம் செய்யத் தொடங்கியுள்ளது.

சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "காப்பான்" திரைப்படத்தில், வில்லன் தரப்பில், வெட்டுக்கிளிகளை ஏவி, வேளாண் சாகுபடியை நாசமாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெறும்....

அந்த காட்சிகளை, அண்மை நாட்களாக, வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் செய்திகள் நிஜமாக்கி வருகின்றன. கடந்த மாதம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் முகாமிட்டு, விவசாயிகளை படாதபாடு படுத்தின. தற்போது, பாகிஸ்தானைத் தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலும், பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர். வெட்டுக்கிளிகள், தமது உடல் எடைக்கு நிகராக, உணவை இரையாக்குவதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்

பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து படையெடுத்து வந்திருப்பதாக கூறப்படும் இந்த வெட்டுக்கிளிகள், பாகிஸ்தானைத் தொடர்ந்து, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா, தெற்கு சூடான், எரித்திரியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளையும், கபளீகரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, இலகு ரக விமானங்கள் மூலம், பூச்சி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை வெட்டுக்கிளிகள் படையெடுத்தால், சுமார் 2 லட்சம் டன் உணவு பொருள் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய இளவேனிற்காலம், வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த பருவம் என்பதால், அவற்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தும், பன்னாட்டு சுற்றுசூழல் வல்லுநர்கள், இல்லையேல், அவை, 500 மடங்கு அளவிற்கு பெருகிவிடக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments