திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர்

0 2507

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரானா அறிகுறிகளுடன், 2 பேர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய் நகரில் உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த 31ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சீனாவில் இருந்து வந்த 14 பேர் இருப்பதாகவும், அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றபோதிலும், அவரவர் வீடுகளில் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் குந்தவை தேவி தெரிவித்தார்.

சீனாவில் இருந்து வந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 10 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரானா அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், சீனாவில் இருந்து திரும்பியவர்கள் என்பதால், வீடுகளிலேயே வைக்கப்பட்டு சுகாதாரத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துமனையிலும் கொரானா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 3 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவவர் ஜெகதீஷ் தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், கேரளாவில் இருந்து  வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்ளை  நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு மருத்துவ குழுவினர்  விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தினமும் 10 முதல் 15 முறை, சோப்பு போட்டு சுத்தமாக கைகளை கழுவினாலே இந்த வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments