கர்நாடக அமைச்சரவை பிப்.6ம் தேதி விரிவாக்கம்
கர்நாடக அமைச்சரவை வரும் 6ந் தேதி விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள், பாரதிய ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தியாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 12 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் வரும் 6 ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது என்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்தார் இந்த விழாவில் புதிய அமைச்சர்களாக 13 பேர் பதவியேற்க உள்ளனர். இந்த மாதம் 17ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
Comments