BAFTA விருது வழங்கும் விழா கோலாகலம்...

0 1433

பிரிட்டனின் BAFTA திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் நேற்றிரவு லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக 1917 தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக கருதப்படும் பாப்டா திரைப்பட விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.

image

இதில் சிறந்த படத்திற்கான போட்டியில் ஐரிஷ்மேன், ஜோக்கர் , ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், பாரசைட் போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதும் இறுதியாக இரண்டாம் உலகப்போரை மையமாக கொண்ட 1917 என்ற திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.இப்படத்தை இயக்கிய சாம் மென்டஸ் சிறந்த இயக்குனராக விருது பெற்றார்

image

ஆங்கிலம் அல்லாத பிறமொழி பட வரிசையில் தென் கொரியாவின் பாரசைட் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி படத்திற்காக ரெனீ ஜெல்வெகர் (renee zellweger ) பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments