சாலையில் சென்றவர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியவன் சுட்டுக் கொலை...

0 993

லண்டனில் வீதியில் செல்லுபவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கத்திக் குத்து காயம் பெற்ற பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத செயல் என பிரிட்டன் அரசு இந்நிகழ்ச்சியை வகைமைப்படுத்தியுள்ளது. கையில் கத்தியுடன் தோன்றிய அந்த நபர் லாம்பத் பகுதியில் கண்ணில் பட்டவரையெல்லாம் கத்தியால் குத்தியபடி சென்றான். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

உடனடியாக சம்பவ இடத்தில் போலீஸ் வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் வட்டமிட்டன. பலர் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments