ஒரே ஊருக்கு, இரு பாதையில்..! ரஜினியும் நாங்களும்...

0 1995

தற்போது நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்றும், அதை விட சிறப்பான ஆன்மீக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என மக்கள் விரும்புவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் நடைபெற்ற துக்ளக் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்தரபாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், துக்ளக் இதழை கையில் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி, நடிகர் ரஜினிகாந்த் நடப்பதை பேசுகிறார் என்றும், அதை பொறுக்க முடியாதவர்கள் நாடக அரசியல் செய்கிறார்கள் என்றும் கூறினார். ரஜினிகாந்தும் தாங்களும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்தும் தாங்களும் ஒரு ஊருக்கு இரு பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், பயணம் வெவ்வேறாக இருந்தாலும் செல்லும் இடம் ஒன்று தான் எனவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments