சீனாவில் சிக்கி தவிக்கும் பாக்., மாணவர்கள் கண்ணீர்..!
சீனாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க உதவி செய்யுமாறு கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோக்கள் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சீனாவுடனான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும்பொருட்டு கொரானா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊகான் நகரில் இருந்து தங்கள் நாட்டினரை மீட்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் வெளியேற்றப்படுவதை கண்ட பாகிஸ்தானியர்கள், தங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைதளங்களில் உதவி கோரியுள்ளனர்.
நகரம் முழுவதும் முடங்கியுள்ளதால் உணவின்றி தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Comments