ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 6 பேர் காயம்

0 938

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

லால் சௌக் அடுத்த பிரதாப் பூங்கா பகுதியில் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது, திடீரென கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதில் சிஆர்பிஎப் வீரர்கள் இருவரும், பொதுமக்கள் 4 பேரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட ஜம்மு - காஷ்மீர் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஞாயிறு சந்தையை முன்னிட்டு பரபரப்பாக காணப்பட்ட பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால், அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து அப்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments