தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0 1393

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, 12 இடங்களில் அதி நவீன ஸ்கேனர் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 5 ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன.

image

குடமுழுக்கு அன்று கோவிலுக்குள், முக்கிய நபர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் தவிர, ஸ்கேனர் கருவிமூலம் சோதனையிட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

image

இதுதவிர சந்தேக நபர்கள் நடமாட்டத்தை பின்தொடர்ந்து, ஏதாவது மர்மபொருள் வைத்திருக்கிறார்களா என்பதை ஊடுருவி கண்காணிக்கும் அதிநவீன ஸ்கேனர் கேமரா 12 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments