அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஸ்டாலின் வேண்டுகோள்

0 1155

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதச்சார்பின்மைக்கு எதிராக பேசிவருவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி வருவதாகவும், மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments