மகளிர் கிரிக்கெட் போட்டி T20l தொடர் - ஆஸ்திரேலிய அணி வெற்றி

0 1188

மகளிருக்கான முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதில் கான்பெரா மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 35 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

image

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பெர்ரி 49 ரன்களும், கார்ட்னர் 22 ரன்களும் குவித்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments