எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலையில் நேரடியாக தொடர்புடைய 5 பேர் மற்றும் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக 15 பேர் என மேலும் 20 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் கொலையில் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையிலும், சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா (UAPA) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments