பட்ஜெட் குறித்து விஜயகாந்த் கருத்து..!

0 895

மத்திய பட்ஜெட்டில் நிறைகளும், குறைகளும் சமமாக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் வருமானவரி விகிதம் குறைப்பு, வீட்டுக்கடன் சலுகை, 15 லட்சம் கோடி விவசாயக் கடன் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனிநபர் வருமானத்தை உயர்த்தும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை பலமடங்கு உயர்த்துவதற்கான செயல்திட்டங்கள், நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இல்லை எனக் குறிப்பிட்டு குறைகளும் நிறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments