பழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்திபெற்ற பழனி முருகன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
வேல், சேவல்கள் கொண்ட கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மலைஅடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், உற்சவர் முருகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது.
திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 7 ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் வரும் 8 ம்தேதியும் நடைபெற உள்ளது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments