நடைப்பயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் நிகழ்ச்சி 'பிளாகத்தான்'
சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பிளாகத்தான் எனப்படும் நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கி, திருவான்மியூர் கடற்கரை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பிளாகத்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குப்பையை அகற்ற வந்தவர்கள் முதலில் சிறிது நேரம் கடற்கரையில் நடனம் ஆடினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்துத் தொடங்கி வைக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் நடந்து சென்று குப்பைகளை சேகரித்தனர்.
குப்பைகளை அகற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதில் மக்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
Comments