தீவிரவாதிகளை ஆதரித்தவர்கள் தான் ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் - யோகி ஆதித்யநாத்

0 1205

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரித்தவர்கள் தான் ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலை கோஷங்களை அவர்கள் எழுப்பி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.டெல்லியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ரோகிணி தொகுதியில் பேசிய யோகி, ஷாஹின்பாக் போராட்டக்காரர்களக்கு ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் பிரியாணி சப்ளை செய்து வருவதாக சாடினார். கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஷாஹின்பாக் பகுதியில் குடியரிமை சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் அங்கு போராட்டம் நடத்தியவர்களை  துப்பாக்கியால் சுட்டதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments