நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனையில் இருந்து தப்ப முயற்சி?
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நான்கு பேரும் மாறி மாறி கருணை மனு, மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து நேரத்தை வீணடிப்பதாக மத்திய அரசு கண்டித்துள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் தண்டனையை தாமதப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பொறுமையை குற்றவாளிகள் சோதிப்பதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை மறு உத்தரவு வரும் வரைநிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் திகார் சிறை அதிகாரிகள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுமீது சிறப்பு அமர்வு முன்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது. திகார் சிறை அதிகாரிகள், நான்கு குற்றவாளிகள் தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments