பாலியல் குற்றவாளியின் தாய் கோர்ட்டில் ரகளை..! போலீஸ் நடவடிக்கை பாயுமா..?
சென்னை அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் 15 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன சில நிமிடங்களில் குற்றவாளி ஒருவனின் தாய் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆபாசமாகவும், நாகூசும் வார்த்தைகளாலும் கடுமையாக விமர்சித்து ரகளையில் ஈடுபட்டார்
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மன வளர்ச்சி குன்றிய பள்ளி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேரின் உறவினர்கள்.. தீர்ப்பு என்ன வரும் என்று பலத்த எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் 15 பேரும் பலாத்கார குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்ததும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே ரகளை செய்ய தொடங்கினர்.அதில் இளம் குற்றவாளி ஒருவனின் தாய் செய்த ரகளையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது அந்த அளவிற்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தையும், போலீசாரையும், செய்தி வெளியிட்ட ஊடகங்களையும் கடுமையாக திட்டி தீர்த்தார்.
ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமியை ஆபாசமாகவும் நாகூசும் வார்த்தைகளாலும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார் அந்த ரவுடி பெண்..!
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த ரவுடிப்பெண், சிறுமியின் குடும்பத்தினருக்கு முனிவர்போல சாபம் விடுத்தார்.
ஆபாச வார்த்தைகளால் உறக்க கத்தி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதோடு தன்னை துக்கி ஜெயிலில் போடுமாறும் காவல்துறைக்கு அந்த ரவுடி பெண் சவால் விட்டார்..!மனவளர்ச்சி குன்றிய சிறுமி என்று கூட பார்க்காமல், வலிக்காமல் ஊசி போடு கிறேன் என கூறி தனியாக அழைத்துச்சென்று 70 வயது முதல் 20 வயது வரை 15 மிருகங்கள் தொடர்ச்சியாக பல வாரங்கள் அந்த சிறுமியை நாசம் செய்துள்ளனர் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளது சென்னை பெருநகர காவல்துறை..!
அத்துமீறிய 15 பேரையும் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலையில் முகத்தை மூடியபடி அங்கும் இங்குமாக சுற்றிய குற்றவாளிகளின் உறவினர்கள் அந்த சிறுமியை சரமாரியாக விமர்சித்திருப்பது அப்பட்டமான மிரட்டல் என்பதால் இந்த குற்றவாளியின் தாயையும் கைது செய்து மகனுக்கு துணையாக சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தை தான், அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்ப்பதை பொறுத்து மாறுபடுகின்றது என்பதற்கு பாலியல் குற்றவாளியின் இந்த அடாவடி தாயே சான்று ..!
Comments