7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம் - அமைச்சர்
ராஜீவ் காந்தி படுகொலையில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று காத்துக் கொண்டிருப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று காத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
Comments