இன்னும் 6 மாதங்களில் களமிறங்கும் WhatsApp Pay.. மார்க் ஜுக்கர்பெர்க் உற்சாகம்

0 2692

டிஜிட்டல் பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் வாட்ஸ் அப் பேமெண்ட் அம்சத்தை களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Facebook நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு:

உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அம்சம் வாட்ஸ் அப் பேமெண்ட். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என, முழுவதும் அறிமுகமாவதற்கு முன்னரே வாட்ஸ் அப் பே பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

image

6 மாதங்களுக்குள்:

இந்நிலையில் WhatsApp Pay அம்சம் உலகம் முழுவதும் எப்போது முழுவீச்சில் அறிமுகப்படுத்தப்படும் என கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜுக்கர்பெர்க், அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

image


தரவு இணக்க சிக்கல்:

இந்தியாவை பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப, பணபரிவர்த்தனை தொடர்பான தரவுகளை உள் நாட்டிலேயே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பணிகளை WhatsApp மேற்கொண்டு வருகிறது. மேலும் டிஜிட்டல் கட்டண வணிகத்திற்கான உரிமம் இதுவரை WhatsApp Pay-க்கு வழங்கப்படவில்லை.

வேகம் மற்றும் எளிது:

இந்நிலையில் WhatsApp Pay அம்சம் செயல்பாட்டிற்கு வந்தால் நீங்கள் புகைப்படங்களை எளிதாக விரைவாக அனுப்புவது போல பணத்தை அனுப்ப முடியும் என கூறியுள்ளார் ஜுக்கர்பெர்க், WhatsApp பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், Pay அம்சம் நாங்கள் அறிமுகப்படுத்தும்போது மிக பெரிய வரவேற்பை பெறும் என்று எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

image

தள்ளி போக காரணம்:

WhatsApp Pay அம்சம் ஏற்கனவே பல நாடுகளில் பைலட் மோட் அடிப்படையில் சோதிக்கப்பட்டு வருகிறது. 2018ல் இந்தியாவில் கூட பரிசோதிக்கப்பட்டது. ஒரு மில்லியன் பயனர்களுடன் இந்த சேவையை வெற்றிகரமாக சோதனை செய்த போதிலும், டேட்டாக்களை சேமிப்பது தொடர்பான சிக்கல் மற்றும் விதிமுறைகள் வாட்ஸ்அப் பே அறிமுகத்தை இந்தியாவில் தள்ளி போக செய்து வருகின்றன.

எனினும் மிகப்பெரிய எண்ணிக்கையில் பயனர்களை கொண்டுள்ள இந்தியாவில், சிக்கல்களை தீர்த்து விரைவில் WhatsApp Pay அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments