பட்ஜெட் உரையில் இடம் பெற்ற திருக்குறள், ஆத்திச்சூடி
பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்திச்சூடி, திருக்குறளை ஆகியவற்றை மேற்கோள் காட்டினார்.
பட்ஜெட் உரையை வாசித்த அவர், விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை அறிவிக்கும் போது "பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டினார்.பெண் கவிஞரான அவ்வையார் எழுதிய பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள் என்றும் இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருகிறது என என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும்
''பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து'' என்ற திருக்குறளை கூறி, நோயின்மை, செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, பாதுகாப்பு இந்த ஐந்தும் நாட்டின் அணிகலன் என்று விளக்கம் கூறினார்.
Comments