மத்திய பட்ஜெட் 2020 - தமிழகத்திற்கான பட்ஜெட்..!

0 2441

சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்  என்றும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும், 2023ம் ஆண்டுக்குள் டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும், பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை - பெங்களூரு இடையே எக்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும், 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதை மின் மயமாக்கப்படும் என்றும், நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பொருளாதார பாதை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் என்றும், சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும் என்றும், தனியார் - அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் எனவும், போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ரயில் நிலையங்கள் அரசு - தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும், தேசிய எரிவாயு தொகுப்பு 27 ஆயிரம் கி.மீ என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும், ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலம் இணைக்கப்படும், பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் இணையதள வசதி அளிக்கப்படும், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு வரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தியுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர், வர்த்தக ரீதியிலான வங்கிகளின் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

 தமிழகத்தின் ஆதிச்சநல்லுரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 64வது இடத்தில் இருந்த இந்திய சுற்றுலா துறையில் 34-வது இடத்துக்கு முன்னேறியதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், இதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments