மத்திய பட்ஜெட் 2020 - கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு..!

0 1587

த்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடியும், தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12,300 ஆயிரம் கோடியும்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும் என்றும், முன்னணி பல்கலைக்கழங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் 3000 கோடி ரூபாயும், தேசிய ஜவுளித் திட்டத்திற்கு 1480 கோடி ரூபாயும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 27,300 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கட்டமைப்புகளை உருவாக்கவும் 103 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு 69 ஆயிரம் கோடியும், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடியும், ஜல் ஜீவன் திட்டத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 8 ஆயிரம் கோடியும், தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,600 கோடி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு 85 ஆயிரம் கோடி, பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு 28,600 கோடி, கலாச்சாரத்துறைக்கு 3150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இதேபோல் மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு 9500 கோடி, 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த 100 கோடி, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 5958 கோடி, காஷ்மீர் யூனியன் பிரதேச மேம்பாட்டிற்கு 30ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு மூன்றரை லட்சம் கோடியும், சுத்தமான காற்று திட்டத்திற்கு 4400 கோடியும், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 2500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் வீடுகள் என்ற இலட்சியத்தை அடையும் வகையில், வங்கிகளில் வீடு வாங்க அளிக்கப்படும் கடன் மீதான வட்டித்தொகையில் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாய் மானியம் அளிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாகவும்,  2020ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ வீட்டுகடன் ஒப்புதல் பெற்றோருக்கு இந்த தள்ளுபடி சலுகை அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments