இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்து, நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் விவசாயி

0 1177

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இயற்கையான முறையில் கரும்பை சாகுபடி செய்து, நார்ட்டுச்சர்க்கரை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் விவசாயி ஒருவர்.

கஸ்தூரிநகரைச் சேர்ந்த சோமசுந்தரம், தனக்குச் சொந்தமான 25 ஏக்கரில் நாட்டு ரக கரும்பை பயிரிட்டு வருகிறார். தனது தோட்டத்தில் வளர்த்து வரும் நாட்டுமாடுகளின் கழிவுகளைக் கொண்டு அங்கேயே இயற்கை உரம் தயாரித்து கரும்புகளுக்கு பயன்படுத்துகிறார்.

image

இயற்கை உரத்தால் செழித்து வளரும் அந்தக் கரும்புகளை அங்கேயே ஆலை அமைத்து நாட்டுச்சர்க்கரை, வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நஞ்சில்லாத அந்த நாட்டுச்சர்க்கரையை குறைந்த விலைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆர்வமுடன் மக்கள் வந்து வாங்கிச் செல்வதாக சோமசுந்தரம் கூறுகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments