எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு..!
எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தக ரீதியான வங்கிகளின் நிலையை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்படும்.
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள பணத்திற்கான காப்பீட்டு தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிவிடெண்ட் விநியோக வரி நீக்கப்படுவதாக அறிவித்த நிதியமைச்சர், இனி நிறுவனங்கள் டிவிடெண்ட் விநியோக வரி செலுத்த தேவையில்லை என்றார்.
இனி டிவிடெண்ட் பெறுபவர்களுக்கு மட்டும் உரிய விகிதத்தில் வரி விதிக்கப்படும். வரி செலுத்துவோருக்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை கொண்டுவரப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
5 கோடி ரூபாய் வரையிலான வருவாய் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு, ரொக்க பரிவர்த்தனை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் கணக்கு தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு முன்னர் 1 கோடி ரூபாயாக இருந்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனை மறுசீரமைப்பதற்கான காலகட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனத்திற்கு ஐபிஓ எனப்படும் தொடக்க பங்குகளை வெளியிட்டு, அதில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்.
Comments