கல்விக்கு முதலமைச்சர் ரூ 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - அமைச்சர் சம்பத்
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கல்வித்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். கடலூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் சம்பத் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், சிறு குறு தொழில் தொடங்க 15 நாட்களில் அனுமதி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும் கூறினார்.
Comments