SSI வில்சன் கொலைக்குற்றவாளிகளுக்கு நிதியுதவி செய்தவன் கைது

0 1243

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாகக் கூறப்படும் ஷேக் தாவூத் என்ற நபரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேரை தேவிப்பட்டினம் அருகே கடந்த 22 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத்தை சித்தார்கோட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

வாட்சப் குழு உருவாக்கி இளைஞர்களை மூளைச்சலவை செய்து பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட தூண்டிய வழக்கில், ஷேக் தாவூத் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்தவன் என்பதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments