கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி

0 1582

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட்டுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியான காட்சியாக அமைந்தது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி கலாபஸாஸ் என்னும் இடத்தில் பனிமூட்டம் காரணமாக மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் கோபி ப்ரையன்ட், அவரது மகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் செவ்வாய்கிழமை லேக்கர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் இடையே ஸ்டேபிள்ஸ் சென்டரில் (Staples Center) நடக்க போட்டியை அமெரிக்க தேசிய கூடைப்பந்து கழகம் ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments