ஒரே வீட்டில் கணவன் - மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்பு

0 1202

சென்னை வியாசர்பாடியில் ஒரே வீட்டில் கணவன் - மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வியாசர்பாடி எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கரிகாலன் - முனியம்மாள் தம்பதி தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது மகன் அரிகரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு செல்ல இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கரிகாலன், முனியம்மாள் ஆகியோர் வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முனியம்மாளின் சகோதரரான மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் என்பவரும் உணவில் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments