பிரதமர் மோடியின் நோக்கம் குறித்து சந்தேகம் வேண்டாம்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 784

பிரதமர் நரேந்திர மோடியை 24 காரட் தங்கம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்துள்ளார்.

டெல்லியின் மெஹ்ரோலியில் (Mehrauli) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,   அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஆனால் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் வாக்கு அரசியலுக்காக முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் தவறான எண்ணத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி 24 காரட் தங்கம் என்றும், அவரது நோக்கம் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், மத்திய அரசுடன் நல்லுறவை பராமரிக்காமல், கடந்த 5 ஆண்டுகளாகவே மோதல் போக்கில் ஈடுபட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments