இந்திய வீரர் மணிஷ் பாண்டே புதிய சாதனை

0 1470

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் மணிஷ் பாண்டே (Manish Pandey) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 12 முறை ஆட்டமிழக்காதவர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 50 ரன்கள் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தார்.  இதற்கு முன்பு விளையாடிய 5 சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், சர்வதேசம் அல்லாத 6 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த அவர், முதல் தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments