இந்தியாவில் பொருளாதார மந்த நிலை உருவாகவில்லை - IMF தலைமை இயக்குநர்
பொருளாதார சரிவு ஏற்பட்டாலும், இந்தியாவில் பொருளாதார மந்த நிலை உருவாகவில்லை என்று IMF எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
பணமதிப்புநீக்கம், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்திற்கு தற்காலிக சரிவு ஏற்பட்டுள்ளது என்று வாஷிங்டனில் தம்மைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார். மோடி அரசு எடுத்துள்ள இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு நீண்டகால பலனை அளிக்கும் என்று கூறியுள்ள அவர், அடுத்த நிதியாண்டில் 6 புள்ளி 5 என்ற வளர்ச்சியை இந்தியா எட்டும் என்றும் கணித்துள்ளார்.
பொருளதார சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Comments