ரூ.1.10 லட்சம் கோடியை தாண்டியது GST வருவாய் - மத்திய அரசு
ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வரி வருவாயாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 828 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், அதற்கடுத்து 2ஆவது அதிகப்பட்ச வருவாய் இது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி மூலம் 20,944 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் 28,224 கோடியும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம் 53,013 கோடியும், செஸ் மூலம் 8,637 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது 6ஆவது முறை என்றும், தொடர்ந்து 3ஆவது மாதமாக 1 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி வருவாய் தாண்டியுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments