மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்

0 5974

நாடாளுமன்ற மக்களவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன

பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது

பட்ஜெட் அறிக்கையில் அருண்ஜெட்லிக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன்

வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும் ஏப்ரல் முதல் அமல்

image

இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

கடந்த 6 ஆண்டு கால மோடி அரசில் நாடு முழுவதும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

நிர்வாக சீர்திருத்தங்கள் மூலமாக நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளது

ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை

மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி இந்தியாவின் வரி முறையை நாடு முழுவதும் ஒருங்கிணைத்துள்ளது

image

இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது

சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் தற்போது உருவாகியுள்ளனர்

ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது

40 கோடி வருமான வரிக் கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்தியா தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம்

ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது

image

நடுத்தர குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம்

டிஜிட்டல் இந்தியா:

டிஜிட்டல் இந்தியா மூலமாக உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

பட்ஜெட்டின் 3  நோக்கம்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதுல்

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம்

image

விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும்

வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்றி செயல்படுத்தப்படும்

தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்

20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்

அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்

ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியை சுட்டிக்காட்டி நிர்மலா பட்ஜெட் உரை

image

பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச் சூடியை சுட்டிக்காட்டினார் நிர்மலா

பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச் சூடியை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்

விவசாயிகள் பலன் பெற கிராம அளவில் விவசாய பொருட்கள் சேமிப்பகம் அமைக்க முயற்சி

கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி எனும் புதிய திட்டம்

விளைபொருட்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன் குளிர்சாதன வசதியுடன் தனி ரயில்

விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்

ஒரு மாவட்டம் - ஒரு உற்பத்தி என்கிற அடிப்படையில் தோட்டக்கலைத்துறையில் புதிய முயற்சி

கிருஷி உடான் திட்டம் மூலமாக வடகிழக்கு மாநிலங்களின் வேளாண் துறையை மேம்படுத்த முடியும்

கிருஷி உடான் திட்டம் மூலமாக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்படும்

நபார்டு மூலமான மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு

image

2021க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு

2022-2023க்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு

சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்

வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு கிசான் ரயில் : குளிர்சாதன வசதியுடன் பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் வசதி

விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

ஆயுஷ்மான் திட்டத்தின் படி அரசு - தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்

பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா திட்டத்தற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு

ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500கோடி நிதி ஒதுக்கீடு

புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பொறியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்படும்

150 பல்கலைக்கழங்களில் புதிய பாடப்பிரிவுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்

image

முன்னணி பல்கலைக்கழங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை

மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்

ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை

2020-201 நிதி ஆண்டில் ரூ.99,300 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு

பெரிய மருத்துவமனைகளிலும் முதுகலை மருத்துவ கல்வியை வழங்க ஊக்கம் வழங்கப்படும்

உத்தரபிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.3000 கோடி ஒதுக்கீடு

image

அரசு - தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக மேம்படுத்தப்படும்

இந்தியாவில் செல்போன் உற்பத்தியை ஊக்கப்படுத்த திட்டம் வகுக்கப்படும்

தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த முதலீட்டளார்களுக்கு அனுமதி வழங்க பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்படும்

தேசிய ஜவுளித் திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு

உள்நாட்டில் மின்னணு பொருட்களை ஊக்கப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும்

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒரு ஏற்றுமதி கேந்திரமாக வேண்டும் என்பது மோடியின் கனவு

அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்க திட்டம் இயற்றப்படும்

வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு

ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம்

2000கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

2023ம் ஆண்டுக்குள் டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்

பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும்

சென்னை - பெங்களூரு இடையே எக்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்

தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிததாக அறிமுகம் செய்யப்படும்

27000 கிமீ தொலைவு ரயில் பாதை மின் மயமாக்கப்படும்

image

ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்

சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும்

தனியார் - அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு

2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள்

போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

மின் பயன்பாட்டை ஒழுங்கு படுத்த டிஜிட்டல் மீட்டர்கள்

ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்

4 ரயில் நிலையங்கள் அரசு - தனியார் பங்களிப்புடன் மறு மேம்பாடு செய்யப்படும்

தேசிய எரிவாயு தொகுப்பு 27 ஆயிரம் கி.மீ என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்

ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலமாக இணைக்க திட்டம்

பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் இணையதள வசதி

நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்

தேசிய அளவிலான 2 அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தகவல் சேகரிப்பு மையங்களை தனியார் அமைக்க வகை செய்யும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்

குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8000 கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்

தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு

தேசிய ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்த சிறப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்படும்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கிமீக்கு பொருளாதார பாதை அமைக்கப்படும்

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம்

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம்

கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு

ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களாக மேம்படுத்தப்படும்

சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு

சிறந்த நாடு குறித்து திருவள்ளுவர் கூறியதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரை

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து - எனும் திருக்குறளை கூறி நிர்மலா விளக்கம்

மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு

நோயில்லாமல் வாழ பிரதமர் மோடி, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார்

விளைபொருள் பெருக்கம் என்பதற்குத்தான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்

நாட்டை பாதுகாப்பதிலும் மோடி சிறப்பாக செயல்பட்டு திருக்குறளின் படி செயல்பட்டு வருகிறார்

சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உலக நாடுகளுடன் இணைந்து நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்க திட்டம்

வரி என்ற பெயரில் மக்களை சித்ரவதை செய்வதை ஏற்கவே முடியாது

நாட்டிற்கு வரி செலுத்தும் மக்களுக்கு மத்திய அரசு நேர்மையாக இருக்கும்

சிவில் தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வகை செய்யும் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்

2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5958 கோடி ஒதுக்கீடு

காஷ்மீர் யூனியன் பிரதேச மேம்பாட்டிற்கு ரூ.30ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கீடு

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தியுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்

வர்த்தக ரீதியிலான வங்கிகளின் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது

வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு

மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு ரூ.9500 கோடி ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம்

மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்

மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு

எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும்

வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும்

வரும் நிதி ஆண்டில் மத்திய அரசின் செலவு 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு

கார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை

பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும்

வருமான வரி செலுத்துவதில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது

5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி

7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி

10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி

12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானவம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி

5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் இல்லை

7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி

10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி

12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானவம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி

ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை

image

டிவிடண்ட் வழங்கும் போது விற்பனையாளரிடம் வசூலிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து - இனி டிவிடண்ட் வாங்குபவர்களுக்கு மட்டுமே வரி

புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 சதவீதம் என நிர்ணயம்

குறைந்த விலை வீடுகளுக்கான மத்திய அரசின் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ரூ.5 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு தணிக்கை தேவையில்லை

வருமான வரி முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்

பான் கார்டுகளை உடனடியாக விநியோகிக்க புதிய முறை அமல்படுத்தப்படும்

சுங்க வரிக்கான விலக்கு குறித்து வரும் செப்டம்பர் மாதம் ஆய்வு செய்யப்படும்

காலணிகள் மற்றும் அறைகலன்களுக்கான சுங்க வரி உயர்வு

மருத்துவ உபகரணங்களுக்கான சுகாதார மேல்வரி உயர்வு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments