ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ... அவசரநிலை அறிவிப்பு

0 1741

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் புகைமூட்டம் நெருங்கியுள்ளது. அங்கு நிலவும் வறண்ட வானிலை, அதீத வெப்பம் மற்றும் பலமாக வீசும் வெப்பக் காற்றால் மக்கள் 72 மணி நேரம் வெளியில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவியதால் ஆங்காங்கே இருந்த 80க்கும் மேற்பட்ட புதர்களுக்கும் தீ பற்றி புகை மூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதுவரை இத்தீவிபத்துக்கு 33 பேர் பலியாகினர். 2500 வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. ஒரு லட்சத்து பதினேழு ஆயிரத்து சதுர கிலோமீட்டர் வனப்பகுதியின் பரப்பளவு தீயில் கருகி விட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments