திருப்பதியில் நாளை தரிசனம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

0 1709

ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்றுள்ளார்.

அந்த கோவிலில் நாளை நடைபெறவுள்ள ரதசப்தமி விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேவஸ்தான துணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, கிருஷ்ணர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதலமைச்சர்,  ஹயக்ரீவர் கோவிலில் தரிசனம் செய்தார். இன்று இரவு திருமலையில் தங்கும் முதலமைச்சர், நாளை  நடைபெறவுள்ள ரதசப்தமியில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments