நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

0 2118

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடப் போவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீல் மல்க கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று அவர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தம்மிடம் சவால் விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என்றும் அவர் கண்ணீல் மல்க தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments