கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் -தமிழக மாணவர் வேண்டுகோள்

0 1744

சமூக வலைதளங்களில் பரவும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென சீனாவிலிருந்து ஓசூர் திரும்பிய மருத்துவ மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், சீனாவில் செஜியாங்க் (Zhejiang) நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தாயகம் செல்லுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியதின் பேரில், ஜனவரி 26ஆம் தேதி சென்னை வந்த மாணவர் சந்திரசேகரன், மருத்துவ பரிசோதனைக்கு பின் சொந்த ஊரான ஓசூருக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் சந்திரசேகரன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments