இரண்டாவது முறையாக நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளித்த நீதிபதி தர்மேந்திர ராணா, குற்றவாளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
தமது பத்து பக்க தீர்ப்பில், ஒரே வழக்கில் தண்டனை பெற்ற நான்கு பேரையும் வெவ்வேறு நாட்களில் தூக்கிலிட முடியாது என்று அவர் கூறியுள்ளார். சட்ட வாய்ப்புகளை பயன்படுத்த குற்றவாளிக்கு உரிமை உள்ளதால், அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments