இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்தது.
நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எச்சரிக்கை கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிந்து 40,723 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் குறைந்து 11,962 புள்ளிகளாக சரிந்தது.
எஸ்பிஐ வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 41 சதவீதம் உயர்ந்து 5583 கோடி ரூபாயாக அதிகரித்ததால், அந்நிறுவன பங்கின் விலை இரண்டரை சதவீதம் வரை உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 34 காசுகளாக இருந்தது.
Comments