பொருளாதார ஆய்வறிக்கையை லேவண்டர் நிறத்தில் அச்சடித்தது ஏன்?
இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை லேவண்டர் நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன், புதிய 100 ரூபாய் நோட்டின் நிறத்தை மனதில் கொண்டு இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டதாக கூறி இருக்கிறார்.
செல்வத்தை சேர்ப்பது என்பது அதற்கான முயற்சி மற்றும் சிறந்த முதலீட்டின் அடிப்படையில் நடப்பது என்பதாலும், வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற பொருளிலும் லேவண்டர் நிறம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, எண்ணங்களுக்கு வானமே எல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆகாச நீல நிறத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு, பெண்களுக்கு அதிகாரமளித்தலை மனதில் கொண்டு பிங்க் நிறத்திலும் அச்சடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments